செங்கல்பட்டு: நாளை (ஜூன் 13) ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

0
2

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை எளிதாக பெறும் வகையில், ஆறு தாலுகாக்களில் நாளை (இரண்டாவது சனிக்கிழமை) சிறப்பு ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன் அறிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று ரேஷன் கார்டு தொடர்பான திருத்தங்கள் மற்றும் குறைதீர் சேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம், விநியோக குறைபாடுகள் உள்ளிட்ட புகார்களையும் இந்த முகாமில் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டு சேவைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்த்துக்கொள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்:

  • செங்கல்பட்டு தாலுகா – சத்தமங்கலம்
  • மதுராந்தகம் தாலுகா – விராலூர்
  • செய்யூர் தாலுகா – ராவுத்தநல்லூர்
  • திருக்கழுக்குன்றம் தாலுகா – கல்பாக்கம் அணுபுரம்
  • திருப்போரூர் தாலுகா – பஞ்சந்திருத்தி
  • வண்டலூர் தாலுகா – கூடுவாஞ்சேரி