செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் நேற்று (15.06.2026) மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. மரு. எம். வீரப்பன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, உரிய துறைகளின் மூலம் தீர்வு காண அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி க்யூரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) திருமதி பவானி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி விஜயகுமாரி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி சங்கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பொதுமக்கள் நேரடியாக தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் முன்வைத்து மனுக்களை அளித்தனர். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் நடத்தப்படும் இந்த குறைதீர் கூட்டம், மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.