Advertisement

செங்கல்பட்டு அரசு ITI-களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் இந்த சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Advertisement

விண்ணப்பங்கள் 15.06.2026 முதல் 30.06.2026 வரை பெறப்படுகின்றன. தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55673, 99629 86696 மற்றும் 044-29541119 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் அல்லது பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் சந்தித்தும் தகவல்களை பெறலாம்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement