கொரியா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சீன வீராங்கனை ஹான் குவாங்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கொரியாவில் நடைபெற்ற கொரியா ஓபன் சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் திறம்பட விளையாடிய அஷ்மிதா சாலிஹா, வலுவான எதிரணியான சீன வீராங்கனை ஹான் குவாங்சியை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்மிதா, தனது துல்லியமான தாக்குதல் ஆட்டத்தால் சீன வீராங்கனைக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்தார்.
இறுதியில், சிறப்பான வியூகங்களுடன் விளையாடிய இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா, ஹான் குவாங்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள அஷ்மிதா சாலிஹாவிற்கு விளையாட்டு உலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.













