Advertisement

எடப்பாடி பழனிசாமி மீது தவறான குற்றச்சாட்டு: வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி!

எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தேர்தல் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்களே பொறுப்பு என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், திருவண்ணாமலை அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் கொறடாவும் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் காரசாரமாகப் பேசினார்.

Advertisement

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக வழியில் கட்சியை வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அளித்த ஆலோசனையின் பேரிலேயே எடப்பாடி பழனிசாமி அந்த முடிவை எடுத்தார் என்று சுட்டிக்காட்டினார். மேலும், கொங்கு மண்டலத்தின் 21 தொகுதிகளில் வேலுமணி பரிந்துரை செய்தவர்களுக்கும், திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன், விழுப்புரத்தில் சி.வி. சண்முகம் பரிந்துரைத்தவர்களுக்கே வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு வேட்பாளர்களைப் பரிந்துரைத்த இவர்கள், தேர்தல் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்காமல் எடப்பாடி பழனிசாமி மீது பழிசுமத்துவதாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்பில் இருப்பதாகக் பரபரப்புக் குற்றச்சாட்டைக் முன்வைத்தார். மேலும், திமுகவுடன் பேசித் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறிய ரகசியத்தையும் அவர் பகிரங்கப்படுத்தினார். தொடர்ந்து பொதுவெளியில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிப் பேட்டி அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் நலன் கருதி விரைவில் உறுதியான முடிவுகளை எடுப்பார் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement