Advertisement

அச்சிறுபாக்கம் டாஸ்மாக் அருகே போலீசார் வசூல் வேட்டை? – மது பிரியர்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக மது பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தவெக அரசின் உத்தரவின்படி பள்ளி, கல்லூரி, கோயில்கள் அருகே இயங்கி வந்த பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மதுராந்தகம் மற்றும் கீழ்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அச்சிறுபாக்கம் மதுபான கடைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் கூடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்த சூழலை பயன்படுத்தி சில போலீசார் வாகன தணிக்கை என்ற பெயரில் மது பிரியர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், சிறு வியாபாரிகளிடம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், கடைகள் மற்றும் உணவகங்களில் பணம் செலுத்தாமல் பொருட்கள் பெற்று செல்வதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement