செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நேற்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மரு. எம். வீரப்பன், இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும், கூட்டத்தின் போது முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதியோர்களின் உரிமைகளை பாதுகாப்பதும், அவர்களுக்கெதிரான வன்முறை மற்றும் புறக்கணிப்பை தடுக்க சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி க்யூரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) திருமதி பவானி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி விஜயகுமாரி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி சங்கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு ரமேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு உதயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதியோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





