Home செங்கல்பட்டு வடக்கு வாயலூர் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்: மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

வடக்கு வாயலூர் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்: மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

0

பவுஞ்சூர் அருகே உள்ள வடக்கு வாயலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிதிலமடைந்துள்ள சுற்றுச்சுவரை இடித்து அகற்றி புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பூர், மாவடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மாணவர்களின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உயர்நிலைப் பள்ளி கட்டப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 99 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சுவர் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்டகால பராமரிப்பின்றி இருப்பதால் சுவர் பொலிவிழந்து சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

கோடை விடுமுறை முடிவடைந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பலவீனமான சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளியை ஆய்வு செய்து, சேதமடைந்த சுற்றுச்சுவரை அகற்றி புதிய பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version