Advertisement

விஜயுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை: நாளை முதல்வராக பொறுப்பேற்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயை, தமிழக அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்கான நடைமுறைகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் விஜயைச் சந்தித்துப் பேசினர்.

Advertisement

புதிய அரசு பொறுப்பேற்பதற்கான முன்னேற்பாடுகள், பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான முக்கியக் கோப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வழங்கப்படும் ‘இசட் பிளஸ்’ (Z+) அந்தஸ்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெறிமுறைகள் குறித்தும் டிஜிபி-யுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விஜய் ஏற்கனவே 108 எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் நடத்தியுள்ள இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் முறைப்படி முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement