Advertisement

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி: தங்கும் விடுதி கட்டணங்கள் அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கும் விடுதிகளின் (Hostels/PG) மாதாந்திர கட்டணத்தை அதிரடியாக உயர்த்துவதாகத் தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் பி.ஜி. ஓனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மே 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.விலை உயர்வுக்கான பின்னணிவிடுதி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய இக்கட்டான சூழல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026 பிப்ரவரி மாதம் முதல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஒரு சிலிண்டர் ரூ. 6,000 முதல் ரூ. 7,000 வரை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

சிலிண்டர் விலை உயர்வால் பல விடுதிகளில் மர அடுப்புகளைப் பயன்படுத்தி உணவு சமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது மரக்கட்டைகளின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எரிவாயு மட்டுமின்றி, அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பழைய கட்டணத்தில் சேவையைத் தொடர முடியாது என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டண விபரம் (குறைந்தபட்சம்)வரும் மே 5-ஆம் தேதி முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டணப் பட்டியல் பின்வருமாறு,

Advertisement

தங்கும் வசதி (Sharing) – Non-AC கட்டணம்(ரூ.) – A C கட்டணம் (ரூ.)
4 பேர் தங்கும் அறை, ரூ. 6,500, ரூ. 7,500
3 பேர் தங்கும் அறை, ரூ. 7,000 ரூ. 8,000
2 பேர் தங்கும் அறை, ரூ. 8,000 ரூ. 9,000

இந்தக் கட்டண உயர்வு என்பது குறைந்தபட்ச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியிலும் வழங்கப்படும் கூடுதல் வசதிகளைப் பொறுத்து இந்த விலையில் மாற்றங்கள் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுதிவாசிகளுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement