Advertisement

தவெக நிர்வாகிகள் – போலீஸ் இடையே வாக்குவாதம் – காரணம் என்ன?

ஊர்வலம் போக உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது என்று காவல்துறையினருக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிகழ்வு செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

நடிகர் விஜய்யின்  தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் ஆரம்பித்தார். மேலும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்க நடிகர் விஜய் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளது. மேலும் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக-வின் முதல் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

இதனை கொண்டாடும் வகையில்  செங்கல்பட்டு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய பேருந்து நிலைய வாசலில் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக செல்ல முயன்ற தவெக நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி பேரணி செல்ல அனுமதி வாங்கினீர்களா? என கேள்வி எழுப்பினர். இதனால் தவெக நிர்வாகிகள் காவல்துறையுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பின்னர், புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று இனிப்பு  வழங்க உள்ளதாக தெரிவித்து விட்டு பேருந்துகளில் ஏறி இனிப்புகளை பொதுமக்களிடம் கொடுத்தனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஈடுப்பட்டதால் செங்கல்ப்பட்டு புதிய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement