Advertisement

பொண்டாட்டிக்கு அப்புறம்தான் சாமி: சக்தி விருதுகள் விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சிப் பேச்சு!

சென்னையில் நடைபெற்ற சுய சக்தி விருதுகள் விழாவில் நடிகர் சூரி, நடிகை ஊர்வசி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு பெண்மையைப் போற்றி நெகிழ்ச்சியாகப் பேசினர்.

சென்னை சேத்பட்டில் உள்ள தனியார் அரங்கில் சக்தி மசாலா சார்பில் ‘சுய சக்தி விருதுகள்’ வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெண்களின் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ்மோகன், மரிய வில்சன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, நடிகர் சூரி மற்றும் நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, பெண்கள் இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் முழுமை அடைவதில்லை என்று குறிப்பிட்டார். “பெண் உயரும்போது அவரது குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்து உயர்கிறது. சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி இல்லை, பொண்டாட்டிக்கு அப்புறம்தான் சாமி. பிள்ளைகளை வளர்ப்பது ராணுவ சேவைக்குச் சமமானது” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், தான் பெரிதாகப் படிக்கவில்லை என்ற ஏக்கம் இருந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமிற்கு விருது வழங்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நடிகை ஊர்வசி, “எனக்கு இயக்குநர் பாக்கியராஜ் சாருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லாதது பெரிய வருத்தமாக இருக்கிறது. இந்தியாவிலேயே பாக்கியராஜ் அவர்களின் கதைகள்தான் அதிக அளவில் திருடப்படுகின்றன. அவரது கதைகளை எப்போது ரீமேக் செய்தாலும் வெற்றிபெறும்” என்று புகழாரம் சூட்டினார்.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முதல்வர் ஜோசப் விஜய் தன்னை அணைத்து வழிநடத்தியதாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், “எம்.ஜி.ஆருக்கு ஜேப்பியார் இருந்தது போல முதல்வர் விஜய்க்கு நான் இருப்பேன்” என்று தெரிவித்ததுடன், ஆர்.கே. நகர் பகுதியில் நிலவும் கல்வி இடைநிற்றல் மற்றும் பாலின மேம்பாடு குறித்துத் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகக் கூறினார். ‘அரசியல் களத்தில் இன்ஸ்பிரேஷன் பெண்மணி’ விருது பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தனது குடும்பத்தின் முழு ஆதரவாலேயே அரசியலில் திறம்பட இயங்கி வருவதாக மேடையில் பேசினார்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement