Advertisement

10ம் வகுப்பில் மாநில அளவில் சாதனை: மாணவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள சென் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற மாணவி எம்.சுபபூஜா, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

மாணவியின் இந்த சிறப்பான வெற்றி கல்வித்துறையிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவியின் சாதனையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Advertisement

இந்த நிலையில், செங்கல்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக துணை செயலாளருமான Varalakshmi Madhusudhanan, மாணவி சுபபூஜாவை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார்.

அப்போது, தொடர்ந்து உயர்கல்வியிலும் சிறந்து விளங்கி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் மாணவியின் கடின உழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இந்த வெற்றிக்குக் காரணம் என பாராட்டினார்.

Advertisement

மாணவியின் சாதனை, பிற மாணவர்களுக்கும் ஊக்கமாக அமையும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement