Advertisement
,

“கர்நாடகாவிற்குத் தனியாகப் போகாதீர்கள்!” – முதல்வர் விஜய்க்கு பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் தனியாகச் செல்லக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் தந்திரமான அணுகுமுறை குறித்துக் கடுமையான எச்சரிக்கையை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. காவிரி என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சனை அல்ல; மாறாக 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமை சார்ந்த விஷயம்” என்று சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து முதல்வர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்துப் பேசிய அவர், “பேச்சுவார்த்தை என்ற பெயரில் கர்நாடக அரசு விரிக்கும் வலைகளில் சிக்கிவிடக் கூடாது. எனவே, முதலமைச்சர் விஜய் தனியாக கர்நாடகாவுக்குச் செல்லக் கூடாது. அதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து, அனைத்துக் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்” எனக் வலியுறுத்தினார்.

மேலும், “காவிரி உரிமையை மீட்டெடுப்பதில் எந்தவொரு விட்டுக் கொடுப்பிற்கும் இடம் தரக்கூடாது” என்றும் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்தார். முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த அதிரடி அறிவுரை தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement