Home செங்கல்பட்டு மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு கருப்புக்கொடி

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு கருப்புக்கொடி

0

மதுராந்தகத்தில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுகம் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய அவர், “அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், கட்சிக்கும் பொதுமக்களுக்கும் துரோகம் செய்து மாற்றுக் கட்சியில் இணைந்ததோடு, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், மீண்டும் மதுராந்தகத்தில் போட்டியிட முயன்றால் அவருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version