Home செங்கல்பட்டு மதுராந்தகம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

மதுராந்தகம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மறைமலைநகராட்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மு. வீரப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இயந்திரங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்நிலை தொழில்நுட்ப பரிசோதனை பணிகள் மற்றும் தேர்தல் தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தேர்தல் பணிகள் வெளிப்படையாகவும், முறையாகவும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கரன், மறைமலைநகர் நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version