Home செங்கல்பட்டு ரூ.342.60 கோடி குடிநீர் திட்டப் பணிகள் தீவிரம்: அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு

ரூ.342.60 கோடி குடிநீர் திட்டப் பணிகள் தீவிரம்: அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் முக்கிய குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களுக்குட்பட்ட கோவளம் உப வடிநிலப் பகுதியில், ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீர் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை அமைச்சர் என். ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், எதிர்கால குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டத்தை முழுமையான தரத்துடன் செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குடிநீர் சேமிப்பு, விநியோகம் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் மேம்படும் என்றும், நீண்டகால குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version