Home செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் செல்போன் பறிப்பு; மறைமலைநகரில் கைது

கூடுவாஞ்சேரியில் செல்போன் பறிப்பு; மறைமலைநகரில் கைது

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், கூடுவாஞ்சேரியில் இளைஞரிடம் செல்போன் பறிக்கப்பட்ட நிலையில், மறைமலைநகரில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தைலாவரம் சிக்னல் பகுதியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மோகித் பாண்டே என்பவர் பணி முடித்து நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இருவர் அவரை அணுகி, அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மோகித் பாண்டே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, மறைமலைநகரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் கடப்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்னா (25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நிர்மல் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரசன்னா திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிரசன்னா மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version