Home செங்கல்பட்டு கிளாம்பாக்கம் குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் வேலைவாய்ப்பு

கிளாம்பாக்கம் குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் வேலைவாய்ப்பு

0

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய குழந்தைகள் உதவி மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளர் (Case Worker) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு வழக்குப் பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அவசர உதவி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயது 42-க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் FO-06, தரைத்தளம், F-பிளாக், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு – 603111 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.06.2026 மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் http://chengalpattu nic. in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NO COMMENTS

Exit mobile version