Home செங்கல்பட்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இனி அலைய வேண்டாம்; வாட்ஸ்அப்பில் ‘Hi’ அனுப்பினால் போதும்!

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இனி அலைய வேண்டாம்; வாட்ஸ்அப்பில் ‘Hi’ அனுப்பினால் போதும்!

0

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற இனி அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 78452 52525 என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் வரும் விருப்பங்களில் “பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை” என்ற சேவையை தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எளிதாக பெற முடியும்.

இந்த புதிய சேவை மூலம் பொதுமக்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும். குறிப்பாக முதியவர்கள், வேலைக்குச் செல்லும் நபர்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

அரசின் டிஜிட்டல் சேவைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version