செங்கல்பட்டில் ஜூன் 19-ல் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

0
2

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 19, 2026 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 60-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்நிறுவனங்கள் தங்களது மனிதவள தேவைக்காக சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதி பெற்றவர்களும், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இம்முகாமில் பங்கேற்கலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலையளிப்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் முகாமில் பங்கேற்பது முற்றிலும் இலவசமாகும். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ‘டி’ பிளாக்கில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூன் 19 அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும்.

வேலை தேடுபவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவரக் குறிப்பு (Bio-data) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-27426020, 8122140214, 8248185171, 9499055895 மற்றும் 9486870577 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் மு. வீரப்பன் தெரிவித்துள்ளார்.