# mychengai.com ## Posts - [விவோ X300 அல்ட்ரா இந்தியா வருகை உறுதி? – 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் மே 7 லாஞ்ச் எதிர்பார்ப்பு](https://mychengai.com/vivo-x300-ultra-india-launch-specs-price-tamil/): சூப்பர் கேமரா, சக்திவாய்ந்த சிப்செட், மிகப்பெரிய பேட்டரி ஆகிய அம்சங்களுடன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையை அதிர்க்க தயாராகிறது விவோ. விவோ நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த vivo X300 Ultra ஸ்மார்ட்போன், வரும் மே 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 6.82 இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. Snapdragon 8 Elite Gen […] - [ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம் – 6300mAh பேட்டரி, Android 16 உடன் பட்ஜெட் போன்](https://mychengai.com/redmi-a7-pro-5g-launch-india-price-specs-tamil/): ₹12,000-க்குள் 5ஜி ஸ்மார்ட்போன் தேடும் பயனர்களை குறிவைத்து, பெரிய பேட்டரி மற்றும் 120Hz டிஸ்பிளேவுடன் புதிய மாடலை ரெட்மி அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்மி நிறுவனம் தனது புதிய Redmi A7 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.9 இன்ச் HD+ LCD டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகிய அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. Unisoc T8300 சிப்செட், 4GB ரேம் மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. […] - [கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் டாப் ஏர் கூலர்கள் – ₹10,000-க்குள் கிடைக்கும் சிறந்த மாடல்கள்](https://mychengai.com/summer-air-coolers-under-10000-best-models-india-tamil/): சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க மக்கள் ஏசி, ஏர் கூலர் வாங்கும் நிலையில், குறைந்த விலையில் அதிக திறன் தரும் மாடல்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்தியாவில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளுக்குள் கூட வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மின்விசிறி மட்டும் போதாமல், ஏர் கூலர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக ₹10,000-க்குள் கிடைக்கும் பல சிறந்த ஏர் கூலர் மாடல்கள் தற்போது விற்பனையில் உள்ளன. அதில் Godrej 61L, […] - [மிரட்டும் மோட்டோரோலா டீசர் - இந்தியாவில் அறிமுகம் எப்போது?](https://mychengai.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a/): ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த அம்சங்களால் கேமிங் மற்றும் கேமரா ரசிகர்களை கவரும் என தகவல் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதனால், இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்த தகவலின்படி, 6.7 இன்ச் Quad-Curved OLED டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறும். […] - [பாமக நிர்வாகி கொலை வழக்கு - முக்கிய குற்றவாளிகள் கைது](https://mychengai.com/pmk-leader-murder-case-arrests-updates/): செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நிர்வாகி நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நகர செயலாளரான இவர், செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த இவரை, நேற்றுமுன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த நாகராஜ், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். […] - [செங்கல்பட்டில் பாமக நிர்வாகி படுகொலை](https://mychengai.com/chengalpattu_pmk_member_death/): செங்கல்பட்டி பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நகர செயலாளரான இவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த […] - [ஈரானில் போர் முடிவுக்கு வருமா? டிரம்பின் நிலைப்பாடு என்ன?](https://mychengai.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ஈரானில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பிராந்திய மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி தற்போது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய நகர்வுகள் மற்றும் அவரது நிலைப்பாடு குறித்து உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. முக்கியத் தகவல்கள்: - [ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை ஈராக்கில் பதற்றம்](https://mychengai.com/%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய அதிரடி அறிவிப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை முடிவுகளால் ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. முக்கிய அம்சங்கள்: ஈராக்கின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கத் தூதரகம் மற்றும் ராணுவத் தளங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் அடுத்தடுத்த நகர்வுகள் சர்வதேச அரசியலில் உற்று நோக்கப்படுகின்றன. - [வள்ளி - முருகப் பெருமான் திருக்கல்யாணம் - திருப்போரூர் கோயிலில் கோலாகலம்](https://mychengai.com/celestial-wedding-thiruporur-murugan-temple/): திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி – முருகப் பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில், கடந்த வாரம் தேரோட்டம், தெப்ப உற்சவம் உள்ளிட்டவை நிறைவேறிய நிலையில், நிறைவு நாளான நேற்று  முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள உற்சவ மண்டபத்தில் ஸ்ரீ […] - [செங்கல்பட்டுக்கு பெருமை சேர்த்த சிறுமணி நெல்](https://mychengai.com/chengalpattu-sirumani-traditional-paddy-success/): பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான செங்கல்பட்டு சிறுமணி ரகத்தை முதன்முறையாக பயிரிட்டு, நல்ல மகசூலை பெற்றிருப்பதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொன்னேரி கருப்புகவுனி, ஆத்துார் கிச்சலி சம்பா, வாசனை சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி என 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன. இவற்றை பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி, பி.ஜி.கணபதி, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான செங்கல்பட்டு சிறுமணி […] - [🗳️ SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் | நீக்கவும் சிறப்பு முகாம்](https://mychengai.com/%f0%9f%97%b3%ef%b8%8f-sir-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 📅 இந்த இரண்டு நாட்களை மிஸ் பண்ணிடாதீங்க! செங்கல்பட்டு / தமிழ்நாடு :வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் சார்பில் SIR (Special Intensive Revision) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 📌 முகாமில் செய்யக்கூடிய பணிகள் இந்த சிறப்பு முகாமில், ஆகிய அனைத்து சேவைகளும் வழங்கப்படும். 🗓️ முகாம் நடைபெறும் நாட்கள் 👉 இரண்டு நாட்கள் மட்டும் இந்த […] - [🏏 கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷி](https://mychengai.com/%f0%9f%8f%8f-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/): சிறப்பான விளையாட்டுக்காக விருது வழங்கி கௌரவிப்பு செங்கல்பட்டு / சென்னை :கிரிக்கெட் களத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, அவரது சிறப்பான செயல்பாட்டை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ⭐ தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் சமீப காலமாக நடைபெற்று வந்த போட்டிகளில், ஆகியவற்றின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி தனித்துவமாக மின்னினார். இதன் அடிப்படையில் அவர் இந்த கௌரவ விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🏆 விருது […] - [மேடவாக்கம் பகுதியில் முடிவடையாத SWD பணிகள்](https://mychengai.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/): கழிவுநீர் தேக்கம் – கொசு தொல்லை – பள்ளி போக்குவரத்து பாதிப்பு செங்கல்பட்டு :செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் (SWD) பணிகள் நீண்ட காலமாக முடிவடையாததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பணிகள் அரைமுடிவாக உள்ள காரணத்தால், 🏥 மருத்துவ அபாயம் கழிவுநீர் தேக்கம் மற்றும் சுகாதார சீர்கேடு காரணமாக, பரவக்கூடிய அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 🚧 போக்குவரத்து & கல்வி பாதிப்பு சாலைகளில் நீர் தேங்கி […] - [🚨 செங்கல்பட்டு அருகே கோர விபத்து](https://mychengai.com/%f0%9f%9a%a8-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0/): அரசு பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதல் 2 பெண்கள் உயிரிழப்பு | 10க்கும் மேற்பட்டோர் காயம் செங்கல்பட்டு :செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில், அரசு பேருந்தும் தனியார் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 📍 விபத்து நடந்த இடம் இந்த விபத்து செங்கல்பட்டு – கூவத்தூர் சாலை பகுதியில், இன்று அதிகாலை […] - [செங்கல்பட்டில் நில அதிர்வு - அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி](https://mychengai.com/chengalpattu-earthquake-news/): செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீதிக்கு ஓடிவந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வீட்டை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் தற்போது வடிய தொடங்கியிருக்கிறது. இது சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் […] - [வியட்நாம் எல்லையில் ரோபோ ராணுவம் - சீனா அதிரடி](https://mychengai.com/china-deploy-500-robots-vietnam-border-security/): வியட்நாம் எல்லைப் பகுதியில் முதற்கட்டமாக 500 ரோபோக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த்த சீன ராணுவம் முடிவு செய்துள்ளது. இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. சீன ராணுவம் ஏற்கனவே ரோபோ நாய்களை பாதுகாப்புப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரோபோ வீரர்களை பயன்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் நெரிசலான இடங்களில் மக்களை வழிநடத்தவும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே அண்மையில் ஒரு ஒப்பந்தம் […] - [மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும் - புதிய செங்கல்பட்டு ஆட்சியர் உறுதி](https://mychengai.com/chengalpattu-new-collector-assures-to-solve-public-issues/): செங்கல்பட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற எஸ்.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக எஸ். அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். புதிய மாவட்டம் உருவாக்கியதில் இருந்து மூன்றாவது ஆசிரியராக பதவி ஏற்றுள்ள எஸ்.அருண்ராஜ் […] - [நூதன முறையில் விழிப்புணர்வு - கலக்கும் நகர்மன்றத் தலைவர்](https://mychengai.com/public-awareness-innovative-methods-waste-management/): தூய்மையை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நூதனமான முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக, நகரமன்றத் தலைவர் எம்.கே.டி கார்த்திக் சில போட்டிகளை அறிவித்துள்ளார். கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார். நம் நகரம் நம் […] - [செங்கல்பட்டில் 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி](https://mychengai.com/chengalpattu-toll-fee-hike-paranur-athur-plazas-revised-rates/): செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டது. இந்த கட்டண உயர்வு […] - [போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளர் கைது - சிக்கும் நடிகர், நடிகைகள்](https://mychengai.com/film-producer-dinesh-raj-arrested-drug-supply-case-actors-under-scanner/): போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், பல முன்னணி நடிகர், நடிகைகளும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை போலீசார் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர். சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் […] - [கோவா கேளிக்கை விடுதி தீ விபத்து - சுற்றுலாப் பயணிகள் 25 பேர் உயிரிழப்பு](https://mychengai.com/goa-arpora-club-fire-accident-gas-cylinder-blast-25-killed-pramod-sawant/): கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கோவாவின் அர்போரா பகுதியில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற கேளிக்கை விடுதி உள்ளது. சுமார் 1.15 ஏக்கர் பரப்பளவில் ஓட்டல், மதுபான பார், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. இந்த கேளிக்கை விடுதியில் வழக்கம்போல சனிக்கிழமை இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கி […] - [இண்டிகோ விமானத்தால் தொடரும் குழப்பம் - பயணிகள் கடும் அவதி](https://mychengai.com/indigo-airlines-service-disruption-chennai-airport-sixth-day-high-ticket-prices/): இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்​களின் சேவை​யில் ஏற்​பட்​டுள்ள பிரச்​சினை காரண​மாக, சென்னை விமான நிலை​யத்​தில் 6வது நாளாக விமான சேவை பாதிக்​கப்​பட்​டது. இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமான நிறு​வனத்​தின் சேவை சீராக இன்​னும் சில தினங்​கள் ஆகும் என்​ப​தால், சென்னை விமான நிலை​யத்​திலிருந்து இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானத்​தில் பயணம் செய்​வதற்​காக முன்​ப​திவு செய்​திருந்த பயணி​கள் பெரும்​பாலானோர், தங்​கள் டிக்​கெட்​களை ரத்து செய்​து, வேறு விமானங்​களில் டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். பயணி​களின் டிக்​கெட்​களை ரத்து செய்​யும்​போது, அந்த பணம் அவர்​களு​டைய […] - [மலையாள நடிகை பாலியல் பலாத்கார வழக்கு - நடிகர் திலீப் விடுதலை](https://mychengai.com/malayalam-actor-dileep-acquitted-actress-assault-case-pulsar-suni-convicted/): இந்திய திரையுலகையே அதிர வைத்த கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். […] - [பழமையான வட்டெழுத்துகளை மீட்டெடுக்கும் செங்கல்பட்டு சிறுமி - பொதுமக்கள் பாராட்டு](https://mychengai.com/chengalpattu-girl-revives-ancient-vattezhuttu-script/): பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இல்லாமல் போன வட்டெழுத்துகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள செங்கல்பட்டு சிறுமிக்கு, தமிழறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வட்டெழுத்து என்பது பண்டைக்காலத்திலிருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சொற்றொடர்களை சுவடிகளில் எழுத, கல்வெட்டுக்களில் பொறிக்க, பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். தற்போதைய தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்கள் இல்லை. வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. இதைப் பயன்படுத்துவதிலும் படித்துணர்ந்து கொள்வதிலும் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இவ்வரிவடிவம் […] - [செங்கல்பட்டில் விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்க குழு](https://mychengai.com/chengalpattu-vinayaka-chaturthi-idol-permission-committee/): செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், எஸ்.பி., சாய் பிரணீத், சார் ஆட்சியர் நாராயணசர்மா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விநாயகர் சிலை நிறுவுவதற்கான அனுமதி வழங்குவதற்கு, செங்கல்பட்டு சார் ஆட்சியர், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், […] - [தவெக நிர்வாகிகள் - போலீஸ் இடையே வாக்குவாதம் - காரணம் என்ன?](https://mychengai.com/tamizhaga-vettri-kazhagam-members-clash-with-police/): ஊர்வலம் போக உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது என்று காவல்துறையினருக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிகழ்வு செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. நடிகர் விஜய்யின்  தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் ஆரம்பித்தார். மேலும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்க நடிகர் விஜய் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது இந்திய தேர்தல் […] - [செங்கல்பட்டு மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் என்னென்ன? - அமைச்சர் உதயநிதி ஆய்வு](https://mychengai.com/minister-udayanidhi-stalin-inspects-development-works-chengalpattu/): விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன கூட்டரங்கில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் […] - [ரயில் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு - பொத்தேரியில் சோகம்](https://mychengai.com/potheri-train-accident-pregnant-woman-friend-killed/): பொத்தேரியில் ரயில் மோதி கர்ப்பிணியும், அவரது ஆண் நண்பரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்‌. இருவரும் கேரளாவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில்,  கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் செல்ல, ரயில் தண்டவாளத்தில் பேசியபடி நடந்து […] - [தனியார் கல்லூரியில் கஞ்சா - மாணவி உள்பட 11 பேருக்கு ஜாமீன்](https://mychengai.com/private-college-ganja-case-11-get-bail-including-girl-student/): பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மாணவி உட்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது. பொத்தேரியில் இயங்கும் பிரபல தனியார் கல்லூரியில் தமிழகம் மட்டுமில்லாமல் பல வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி விடுதிகள் மட்டுமின்றி அருகில் இருக்கும் பிற தனியார் விடுதிகள் மற்றும் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்தும் தங்கியுள்ளனர். இந்நிலையில் […] - [வெல்டிங் பட்டறை உரிமையாளர் நல சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்](https://mychengai.com/welding-workshop-owners-association-protest-demands/): செங்கல்பட்டு தமிழ்நாடு வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பாக மின்சார உயர்வு கட்டணத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வெல்டிங் தொழில் செய்யும் அனைவருக்கும் மின்சாரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும், இரும்பு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரி உயர்வையும் திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெல்டிங் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்திய […] - [பொத்தேரியில் கஞ்சா வேட்டை - 30 மாணவர்கள் கைது](https://mychengai.com/potheri-ganja-raid-30-students-arrested-chennai/): பொத்தேரியில் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா உள்ளிட்ட ஏராளாமான போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட […] - [நெடுஞ்சாலையில் பஞ்சரான கார் - நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்](https://mychengai.com/dubai-bound-traveler-dead-chennai-trichy-nh-accident/): செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில், நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேல்  அகரம் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன் ( 38 ). துபாயில் வேலைபார்த்த இவர், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்து, மீண்டும் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.‌ தனது வீட்டிலிருந்து தனது நண்பர் மற்றும் உறவினருடன் காரில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். ரியாசுதீன் நண்பரான சந்துரு என்பவர் வாகனத்தை […] - [வீடு புகுந்து கடித்த வெறி நாய் - தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் படுகாயம்](https://mychengai.com/stray-dog-attacks-sleeping-children/): அச்சரப்பாக்கம் அருகே தெரு நாய் கடித்ததில் சிறுவர்கள் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சசிகுமார் – சிவகாமி ஆகியோரின் மகன்கள் ஹரிஷ், சஞ்சய் ஆகிய இரு சிறுவர்களும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் சென்ற தெரு நாய் ஒன்று, இரு சிறுவர்களையும் கடித்துள்ளது. சிறுவர்களின் சத்தம் கேட்டு, இதில் காயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […] - [காட்டுப்பாக்கத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி](https://mychengai.com/kattupakkam-kvk-mushroom-cultivation-training-farmers/): காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற காளான் வளர்ப்பு பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். காளான் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வரும் சூழலில், அதை வளர்த்து வருமானம் ஈட்டுவதற்கு விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண் அறிவியல் மையத் தலைவர் சித்தார்த் தலைமை வகித்தார். இந்த பயிற்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்ட பருவ நிலைக்கு, சிப்பி […] - [புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடக்கம்](https://mychengai.com/oe-sankar-launches-pudhiya-puratchi-kazhagam/): அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகர் பகுதியில் உள்ள ரெட்டை மலை சீனிவாசன் மணி மண்டபத்தில் O. E. சங்கர், புதிய புரட்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். புதிய கட்சி தொடங்கிய கட்சியின் நிறுவனத் தலைவர் OE சங்கருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் சூ. க. ஆதவன், மாவட்ட செயலாளர் தமிழினி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். புதிய புரட்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள O. E. சங்கர், புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு […] - [விஜயநகர பேரரசு காலத்து சிலை கண்டுபிடிப்பு - பாலூர் மக்கள் ஆச்சரியம்](https://mychengai.com/vijayanagara-era-arikanda-sculpture-found-near-palur-railway-station-chengalpattu/): பாலூர் கிராமத்தில் விஜயநகர பேரரசு காலத்து சிலை கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர்கள், தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் தலைவர் வெற்றித் தமிழன் ஆகியோர் செங்கல்பட்டு பாலாறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே சாலையில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த அரிகண்ட சிலையைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அச்சிலையை ஆய்வு செய்தனர். அச்சிலை 3.5 […] - [கார் மீது லாரி மோதிய விபத்து - சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு](https://mychengai.com/padalam-road-accident-two-killed-valasaravakkam-family/): படாளம் அருகே முன் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிலர், நேற்று மேல்மருவத்தூரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நள்ளிரவு காரில் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது படாளத்தில்  கேரட் லோடு ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்து காரின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில், காரில் பயணம் செய்த ஏழு வயது சிறுவன், மூதாட்டி […] - [மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை](https://mychengai.com/dvac-raid-maduranthakam-sub-registrar-office-bribery-complaints/): மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர் பlகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் தினம்தோறும் பத்திரப்பதிவு மற்றும் திருமண பதிவு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியாக லஞ்சப் பணம் பெறுவதாக எழுந்தது. அதன் பேரில் ஆறுக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் […] - [செங்கல்பட்டில் மலேசிய முருகர் - இயற்கை சூழலில் அருள்பாலிக்கும் பாலதண்டாயுதபாணி](https://mychengai.com/nadupalani-murugan-temple-chengalpattu-45-feet-statue-like-malaysia-batumalai/): மலேசியா பத்துமலை முருகன் போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நடுபழனி பாலதண்டாயுதபாணி கோயில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர்  வட இந்தியாவில் பல்வேறு கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு வந்த அவர் இப்போதைய செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை திருக்கோயிலில் 4 ஆண்டுகள் தவம் இருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய முருகர்  ஒரு மலைப்பகுதியை சுட்டிக்காட்டி,  அங்கு தனக்கு கோயில் […] - [தொடரும் மின்வெட்டு - நள்ளிரவில் பொங்கியெழுந்த பொதுமக்கள்](https://mychengai.com/guduvanchery-residents-protest-eb-office-midnight-power-cut-issues/): கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. அதே போல் குறைந்த மின் அழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் கூடுவாஞ்சேரி – நந்திரவரம் நகராட்சி முழுவதும் மாடம்பாக்கம், பெருமாட்டு […] - [காதலியை கைப்பற்றிய மாமன் - குத்திக் கொன்ற மைத்துனர்](https://mychengai.com/youth-arrested-murdering-uncle-over-illicit-affair-suspicion-near-maduranthakam/): காதலியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறி மதுபோதையில் மாமனை இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஆதிவாசி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (32). இவரது மனைவி செல்வி (29). இவரது மைத்துனர் கார்த்திக் (25) மற்றும் அவர்களது உறவினரான கவிதா (19) இருவரும் செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் அரிசி ஆலையில் கடந்த 20 நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கார்த்திக் மற்றும் கவிதா ஆகிய இருவரும் […] - [தொலைபேசியில் வந்த கோரிக்கை - மாற்றுத் திறனாளிக்கு உதவிய ஆட்சியர்](https://mychengai.com/collector-arunraj-helps-differently-abled-man-karunguzhi-neengal-nalama-scheme/): மூன்று சக்கர வாகனம் வழங்கக் கோரி தொலைபேசியில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு, ஆட்சியர் நேரில் சென்று உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்குழி பகுதிக்குட்பட்ட நடராஜ், 2022-ல் விபத்தில் இரு கால்களையும் இழந்ததால் மாற்றுத்திறனாளியாகியவர். தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.1,66,500 மானிய வங்கிக் கடன் பெற்று மாவு அரைத்து விற்பனை செய்து சுயதொழில் செய்து வருகிறார். மனைவி எல்லம்மாள் கட்டிடம் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். இந்நிலையில், முதல்வரின் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் […] - [வாட்ஸ் அப்பில் வந்த மனு - நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர்](https://mychengai.com/collector-arunraj-helps-differently-abled-man-after-whatsapp-petition-karumpakkam/): வாட்ஸ் ஆப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், உடனடியாக பட்டா உள்ளிட்ட உதவிகளை வழங்கியது பாராட்டை பெற்றுள்ளது. பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், தனியார் நிறுவனத்தில்  பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, மழையால் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், அவரை பார்த்துக் கொள்ள முடியாத மனைவி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு […] - [பல்லவர் கால சிற்பம் - செங்கல்பட்டில் கண்டெடுப்பு](https://mychengai.com/pallava-era-kotravai-sculpture-found-in-sattamangalam-village/): சாத்தமங்கலம் கிராமத்தில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சாத்தமங்கலம் பகுதியில் பழைய கற்சிற்பம் உள்ளதாக, அவ்வூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது, வயல்வெளியில் மேடான பகுதியில், பாதி மண்ணில் புதைந்த நிலையில், பலகைக் கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். மண்ணை அகற்றி, சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அது 5 அடி […] - [50 கிலோ குட்கா பறிமுதல் - மதுராந்தகத்தில் 2 பேர் கைது](https://mychengai.com/50kg-gutka-seized-near-maduranthakam-two-arrested/): மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுராந்தகம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, செல்வராஜ் என்பவர் வீட்டில் 16 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது வீட்டில் 36 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா […] - [முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜாமினில் விடுதலை - காரணம் என்ன?](https://mychengai.com/former-dgp-rajesh-das-granted-bail-thaiyur-farmhouse-trespass-case-beela-venkatesan/): பீலா வெங்கடேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் புகார் எழுந்தது. இவ்வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,500 ரூபாய் அபராதமும், பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.  உயர்நீதிமன்றம்  தண்டனையை உறுதி செய்த நிலையில், […] - [முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது](https://mychengai.com/ormer-dgp-rajesh-das-arrested-trespassing-beela-venkatesan-farmhouse-thaiyur/): பீலா வெங்கடேசனுக்குச் சொந்தமான தையூரில் உள்ள பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது. மேலும், இருவரது […] - [மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை - தொடங்கி வைத்த ஆட்சியர்](https://mychengai.com/collector-arunraj-inaugurates-student-enrollment-at-sattamangalam-model-school/): மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். சட்டமங்கலத்தில் மாவட்டத்தின் முதலாவது மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மொத்தம் 114 மாணவர்கள் பயில்கின்றனர்.இங்கு பயிலும் மாணவர்களில் 5 பேர் தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். விளையாட்டு போட்டிகளில் வட்டார அளவில் 59 மாணவர்களும், மாவட்ட அளவில் 6 பேரும் முதலிடம் பிடித்து […] - [குண்டு வெடித்து காவலர் படுகாயம் - சதியா? விபத்தா?](https://mychengai.com/guduvanchery-police-quarters-bomb-blast-traffic-constable-injured/): கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே, பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர்  படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், புதிய மற்றும் பழைய  காவலர் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் பழைய காவலர் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியில், நீண்ட காலமாக  பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலர் […] - [ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் - மறைமலைநகரில் அலறிய பயணிகள்](https://mychengai.com/chengalpattu-beach-local-train-signal-failure-delay-news/): சிக்னல் கோளாறு காரணமாக, மறைமலைநகர் பகுதியில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு மின்சார ரயில்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு நகரை சென்னை உள்பகுதியில் இணைக்கக்கூடிய முக்கிய பொது போக்குவரத்தில் ஒன்றாக, மின்சார ரயில்கள் உள்ளன. நாள்தோறும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று  ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் – சிங்கபெருமாள்கோவில் இடையே இடைப்பட்ட பகுதியில் […] - [சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்](https://mychengai.com/cm-stalin-condolences-chengalpattu-road-accident-victims/): செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  அதேபோல், மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டுச் சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துகளை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்துகளில் […] - [லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு](https://mychengai.com/madurantakam-bus-lorry-collision-four-killed-chennai-trichy-highway/): மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் அதிவேகமாக மோதியதில் லாரியின் ஒரு பகுதி பேருந்தின் உள்ளே சென்றது. இதைத் தொடர்ந்து முசிறியில் இருந்து […] - [லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு - மதுராந்தகத்தில் சோகம்](https://mychengai.com/madurantakam-car-accident-four-killed-including-family-members/): மதுராந்தகம் அருகே நடைபெற்ற கொடூர கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், கார் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து திருச்சிக்கு கண்டெய்னர் மூலம் இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சென்னை விமான நிலையத்திலிருந்து பண்ருட்டிக்கு  காரில் தாய் ஜெய் பினிஷா (40), மகன்கள் மிஷால் (20), அக்தல் (16), […] - [சிங்கப்பெருமாள் கோயில் கருட சேவை - கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்](https://mychengai.com/singaperumal-koil-narasimha-perumal-garuda-sevai-festival/): செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். சிங்கபெருமாள் கோயில் – அனுமந்தபுரம் சாலையில் 100 ஆண்டுகள் பழமையான பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புண்ணியகோடி விமானத்தில் உற்சவர் பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ஆம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ […] - [பிரமோற்சவ விழா - நரசிம்ம பெருமாள் கோயிலில் கொடியேற்றம்](https://mychengai.com/singaperumal-koil-narasimha-temple-vaikasi-brahmotsavam-flag-hoisting/): சிங்க பெருமாள் கோயில் அருகே நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய கோயில்களில் ஒன்றாக அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்  உள்ளது. இக்கோவில் ஒரு குடவரைக் கோயிலாகும். பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பிரம்மோற்சவம் பெருவிழா மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை […] - [மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி](https://mychengai.com/chengalpattu-sslc-results-government-model-school-student-state-first/): செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 15,968  மாணவர்களும், 15,948 மாணவிகளும் என மொத்தம் 31,916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும்,  14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்  83.40,  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி […] - [எமனாகும் செங்கல்பட்டு சாலைகள் - 4 மாதங்களில் 154 பேர் உயிரிழப்பு](https://mychengai.com/chengalpattu-district-road-accident-statistics-154-deaths-in-136-days/): செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 நாட்களில் 545 விபத்துக்கள் நடைபெற்று, அதன் மூலம் 154 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பெருமளவு வேலைவாய்ப்பு உள்ளதால் தென் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பிழைப்பிற்காக சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி தென்மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னைக்கு செல்வதற்கு பிரதான நுழைவாயிலாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. […] - [சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை - பத்திரமாக மீட்ட திருநங்கை](https://mychengai.com/newborn-infant-found-near-attur-toll-plaza-chengalpattu/): பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் வீசப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்டு, திருநங்கை ஒருவர், அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையை சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். - [கொள்முதல் நிலைய அதிகாரிகள் மெத்தனம் - 5000 நெல் மூட்டைகள் தேக்கம்](https://mychengai.com/farmers-distress-paddy-procurement-center-apathy-chengalpattu/): செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளின் மெத்தனத்தால், 5000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வில்லியம்பாக்கம் சுற்றியுள்ள ஆத்தூர், வடகால், திம்மாவரம், சாஸ்தரம்பாக்கம், வெண்பாக்கம் கொளத்தூர், கொங்கனாஞ்சேரி ஆகிய கிராமத்தில் பயிரிடப்படும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த ஒரு மாதங்களாகியும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் சுமார் 5 ஆயிரம் […] - [தமிழ்ப் பேராயம் விருது விண்ணப்பம் - எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு](https://mychengai.com/srm-university-tamil-awards-nominations/): தமிழ்ப் பேராயம் விருது பெறுவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தில், தமிழ்ப்பேராயம் செயல்பட்டு வருகிறது. அதன் சார்பில், சிறந்த தமிழ் புத்தகங்கள், சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ்ச்சங்கம், அறிஞர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ், 12 விருதுகள், 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2024ம் ஆண்டுக்கான விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து, பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருதுகளுக்கு உரிய புத்தகங்கள், 2021 […] - [செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் இணைப்பு - வெள்ளத்தை தடுக்க நடவடிக்கை](https://mychengai.com/1000-crore-lake-interlinking-project-chengalpattu-chennai-floods/): சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, கடந்த 2015, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில், வெள்ள நீரால் அதிக அளவு சென்னை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளை இணைத்தால், அந்த வெள்ள பாதிப்புகளை ஓரளவு தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுமார் ரூ.1,000 […] - [குன்னத்துார் ஊராட்சியில் கிராம செயலகம் அமைப்பு - பொதுமக்கள் வரவேற்பு](https://mychengai.com/kunnatthur-panchayat-village-secretariat-building-construction/): கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் ஊராட்சி பகுதியில் இயங்கிய ஊராட்சி அலுவலக கட்டடம் சிதிலமடைந்தது. இதனால், பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் சேவைகள் பெற வரும் நிலையில், போதிய இட வசதியில்லை. நிர்வாக கோப்புகளை பாதுகாப்பாக வைக்க இயலவில்லை. எனவே, வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றுக்காக, 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம செயலகமாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கிராம செயலக […] - [ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் - பக்தர்கள் சிறப்பு வழிபாடு](https://mychengai.com/achirupakkam-parukkal-muthu-mariamman-temple-kumbabishekam/): செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த பருக்கல் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பருக்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன், கங்கை அம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன், விநாயகர், முருகர், நவகிரகங்கள் உள்ளிட்ட ஆலயங்கள் புதியதாக கிராம மக்களால் ஒன்றிணைந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவானது ஏப்ரல் 21ஆம் தேதி காலை மங்கல இசை முழங்க விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோபூஜை, கணபதி பூஜை,  மகா தீபாரதனை நடைபெற்றது. இன்று […] - [வாக்களித்தவர்களுக்கு 5சதவீதம் தள்ளுபடி - செங்கல்பட்டில் அதிரடி](https://mychengai.com/chengalpattu-voters-get-5-percent-hotel-discount/): செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் மக்களவைத் தேர்தலில் 100சதவீதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்.19ஆம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று 100சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று ஆட்சியர் […] - [கல்பாக்கம் அணுமின் நிலைய விபத்து - வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு](https://mychengai.com/jharkhand-worker-dies-at-kalpakkam-plant/): கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக எப்ஆர்எப்சி எனப் படும் மறுசுழற்சி முறையில் அணு மின்சாரம் தயாரிப் பதற்கான ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளில், பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிந்து […] - [செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் நன்கொடை!](https://mychengai.com/chengalpattu-govt-hospital-medical-equipment-donation/): செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பல்வேறு நவீன கருவிகளை தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்கியது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் துறையில், உள் மற்றும் புறநோயாளிகளுக்கு, விளையாட்டு காயங்களோடு வருபவர்களுக்கு மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை, சிறப்பு கருவிகள் தேவை என, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து, தனியார் நிறுவனம் சமூக பாதுகாப்பு பொறுப்பு நிதியில் இருந்து, மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சைக்கான சிறப்பு […] - [செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி](https://mychengai.com/chengalpattu-paddy-procurement-center-opening/): செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிகபடியாக நெல் பயிரிடப்படும் வில்லியம்பாக்கம் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. […] - [திமுக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்](https://mychengai.com/vandalur-dmk-murder-arrest/): வண்டலூரில் திமுக ஒன்றிய செயலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 56 வயதாகும் ஆராவமுதன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு துணை தலைவராகவும் பதவியில் இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி இரவு வண்டலூர் பெருமாள் கோவில் […] - [நெல் கொள்முதலுக்கு எப்போது பணம் - விவசாயிகள் வேதனை](https://mychengai.com/chengalpattu-farmers-paddy-payment-delay-issue/): செங்கல்பட்டு மாவட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நெல்லுக்கு ஒரு மாதமாக பணம் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 நெல் கொள்முதல் நிலையங்கள்  செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை  விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதே போன்று இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்  பாதுகாப்பான இடத்திற்கு […] - [தலசயன பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் - பக்தர்கள் வழிபாடு](https://mychengai.com/thalasayana-perumal-temple-thirukalyanam-celebration/): மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் பிரசித்திப் பெற்ற தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த 16ஆம் தேதி பங்குனி உத்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா நடைபெற்று வந்தன. இந்நிலையில், உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், நிலமங்கை தாயார் […] - [முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் காலமானார்!](https://mychengai.com/former-tamil-nadu-minister-dr-e-ramakrishnan-passes-away-chennai/): செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இ.ராமகிருஷ்ணன். மருத்துவரான இவர், அச்சரப்பாக்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1984ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து 1989ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு திமுகவில் இருந்து […] - [சமையலறைக்குள் நல்ல பாம்பு - செங்கல்பட்டில் அதிர்ச்சி](https://mychengai.com/maraimalai-nagar-7-foot-cobra-found-in-kitchen-rescue-news/): மறைமலைநகர் அருகே வீட்டு சமையலறைக்குள் 7 அடி நீள நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே கீழக்கரணை பகுதியில் வசிப்பவர்கள் வசந்த்-அன்னை தெரசா தம்பதி. நேற்று மதியம் உணவு செய்வதற்காக அன்னை தெரசா சமையல் அறைக்குள் சென்றுள்ளார். அப்போது, உஷ்… உஷ்… என சத்தம் வந்துள்ளது. இதனால், சுதாரித்துக் கொண்ட அன்னை தெரசா, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என பார்த்துள்ளார். அப்போது, கேஸ் அடுப்புக்கு அடியில் இருந்து அந்த […] - [செங்கல்பட்டில் நவீன விளையாட்டுத் திடல் - திட்ட மதிப்பீடு இவ்வளவா?](https://mychengai.com/minister-udhayanidhi-lays-foundation-for-modern-sports-ground-in-chengalpattu/): செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைக்கப்பட உள்ள நவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டின்னார். செங்கல்பட்டு அருகே வேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக ரூ.15 கோடி மதிப்பில் அதிநவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை அப்பகுதியில் ரூ.15 […] - [வண்டலூர் திமுக பிரமுகர் கொலை - குற்றவாளிகளை விசாரிக்க அனுமதி](https://mychengai.com/vandalur-dmk-leader-murder-case-9-accused-5-days-police-custody/): வண்டலூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரணடைந்த 9 பேரையும், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தாம்பரத்தை அடுத்த வண்டலூரைச் சேர்ந்தவர் ஆராமுதன் (56). திமுக பிரமுகரான இவரை கடந்த மாதம் வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள படப்பை செல்லும் பிரதான சாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் இதுவரை சிறுவன் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்ற காவலில் உள்ள 9 […] - [செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் தற்கொலை மிரட்டல் - நடப்பது என்ன?](https://mychengai.com/chengalpattu-juvenile-home-students-suicide-threat-protest/): செங்கல்பட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் மாணவர்கள் சில தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் இருக்கும் அரசு கூர்நோக்கு இல்லத்தில், சென்னை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 மாணவர்கள் உள்ளனர். இதில், சிறப்பு பாதுகாப்பு பிரிவில், 12 பேர் உள்ளனர். இதில், ஒன்பது மாணவர்கள் நேற்று காலை சீர்திருத்த பள்ளி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் ஏறி, குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர். தகவலறிந்து, செங்கல்பட்டு காவல் துறை உயர் […] - [ஆசிரியை பணியிடை நீக்கம் - அரசு அதிரடி நடவடிக்கை](https://mychengai.com/government-school-teacher-uma-maheswari-suspended-social-media-posts-tamil-nadu/): தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக உமா மகேஸ்வரி பணியாற்றி வருகிறார். பள்ளிக் கல்வியில் நிகழும் சிக்கல்கள் குறித்தும் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அதேபோல கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு ஊடகங்கள் வழியாகப் பொது […] - [கோயில் குளத்தில் பிறந்த சங்கு - 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்](https://mychengai.com/thirukalukundram-temple-sangu-theertham-miracle-conch-born-12-years/): திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சங்கு தீர்த்தக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய சங்கு பிறந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இதில்,  தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவின் கடைசி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது.  சிறப்பு வாய்ந்த தீர்த்தமாக விளங்கும் இந்த சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் […] - [வெறிநாய்களால் அடுத்தடுத்து பலியாகும் ஆடுகள்!](https://mychengai.com/maduranthagam-nelli-village-stray-dog-attack-sheep-killed/): செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லி கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெல்லி கிராமத்தை சேர்ந்த எத்திராஜ் மற்றும் ராஜ் ஆகியோர்  கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இருவருக்கும் சொந்தமான ஆடுகளை வீட்டுக்கு அருகே இருந்த ஆட்டுபட்டியில் கட்டி வைப்பது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை இந்த ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த இரண்டு வெறிநாய்கள், அங்கிருந்த ஆடுகளை கடித்துக் […] - [செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு - இளைஞர்களே ரெடியா?](https://mychengai.com/chengalpattu-district-health-society-recruitment-2026-12-vacancies/): செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில், மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பணி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களும் வெளியாகியுள்ளன. சித்த மருத்துவ அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 34,000 […] - [போலியோ சொட்டு மருந்து முகாம் - செங்கல்பட்டில் எங்கெங்கு தெரியுமா?](https://mychengai.com/polio-drops-camp-locations-chengalpattu-2026/): இந்தியா முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ள நிலையில், செங்கல்பட்டில் எங்கெங்கு முகாம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 28வது ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை […] - [திமுக நிர்வாகி கொலை வழக்கு - சிறுவன் உள்பட 5 பேர் சரண்](https://mychengai.com/dmk-functionary-murder-case-five-surrender-including-minor-tamil-nadu/): வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தவர் ஆராமுதன். இவர் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவராகவும் இருந்தார். வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தைப பார்ப்பதற்காக, தனது […] - [காவல் நிலையத்தில் வளைகாப்பு - கர்ப்பிணியை நெகிழ வைத்த போலீஸ்](https://mychengai.com/chengalpattu-police-station-baby-shower-pregnant-constable/): நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்கு சக காவலர்கள் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  தேவி என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார். தேவி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளதால், மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்திருந்தார். ஊருக்கு செல்லும் முன் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் அவருக்கு ஆச்சரிய பரிசு […] - [இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம் - காணொலி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்](https://mychengai.com/stalin-rettamalai-srinivasan-mandal-video/): அச்சிறுப்பாக்கத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர், பட்டியலின மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்நிலையில், இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த 2018-19ஆம் ஆண்டு ரூ.1.35 கோடி மதிப்பில் […] - [5,000 ஆண்டு பழமையான எலும்புக் கூடுகள் - செங்கல்பட்டில் ஆச்சரியம்](https://mychengai.com/chengalpattu-archaeological-surprise-5000-year-old-skeletons/): செங்கல்பட்டு அருகே பாத்தூர் செட்டிமேட்டில் 5000 ஆண்டு பழமையான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் தொன்மைச் சின்னங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அண்மையில் வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவர்களது எலும்புகளைத் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, […] - [செங்கல்பட்டில் சுற்றுலா மாளிகை தயார் - திறப்பு விழா எப்போது?](https://mychengai.com/chengalpattu-new-government-guest-house-inauguration/): செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா மாளிகை கட்டடப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 2019ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது. இங்கு, புதிய ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து, அரசுத்துறை உயரதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்காக, சுற்றுலா மாளிகை கட்ட, 2022ஆம் ஆண்டு, ரூ.6.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கு, டெண்டர் விடப்பட்டு, அதே ஆண்டு […] - [திமுக எம்.பி மகன் போதையில் விபத்து: செங்கல்பட்டில் பரபரப்பு](https://mychengai.com/dmk-mp-son-drunk-driving-chengalpattu/): செங்கல்பட்டில் போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்று இருசக்கர வாகனங்கள் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.பி-யின் மகனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஹூண்டாய் கார் ஒன்று நேற்று நள்ளிரவு அதிவேகத்தில் சென்றது. திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. கார் இடித்து தள்ளியதால் கீழே விழுந்தாலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் காயமின்றி […] - [செங்கல்பட்டில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவர்கள்](https://mychengai.com/chengalpattu-students-dangerous-railway-track-crossing/): செங்கல்பட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை தடத்தில், மூன்று தடங்களில் நாள்தோறும் 60க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து, இங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ – மாணவியர், நாள்தோறும் ரயில் நிலையத்தில் இருந்து குறுக்கு […] - [திருநீர்மலையில் கம்பிவட ஊர்தி - பட்ஜெட்டில் அறிவிப்பு](https://mychengai.com/thiruneermalai-temple-ropeway-project-announced-tamil-nadu-budget/): திருநீர்மலை கோயிலுக்கு கம்பிவட ஊர்தி அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னதாக இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வழிகாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி எனக் […] - [கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா - பக்தர்கள் சிறப்பு வழிபாடு](https://mychengai.com/thiruporur-kandaswamy-temple-masi-brahmotsavam-2026/): திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசித்தனர். திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா திருப்போரூர் முருகன் கோயில், வட்டமண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் […] - [திருப்போரூர் கந்தசாமி கோயில் தேர் விழா - டிஎஸ்பி தலைமையில் சமாதானக் கூட்டம்](https://mychengai.com/thiruporur-kandaswamy-temple-chariot-festival-peace-meeting/): திருப்போரூர் ஆதி திராவிடர் குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு முருகர் தேர் செல்வது சம்பந்தமாக அனைத்து சமூகத்தினர் சமாதான கூட்டம் மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய  நிகழ்வாக கிருத்திகை, தேர்த்திருவிழா, தெப்ப திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். திருத்தேர் திருவிழாவின் மறுநாள் […] - [நகைக்காக மூதாட்டி கொலை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை](https://mychengai.com/%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95/): நகைக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமம், வினாயகபுரத்தைச் சேர்ந்த 60 வயதான பார்வதி, கடந்த 2018ஆம் ஆண்டு, டிசம்பர் 7ஆம் தேதி திருப்பகுழி ஏரியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, முசரவாக்கம் ரேணுகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சீராளன் என்பவர் பார்வதியை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் […] - [அரியனூரில் புதிய பேருந்து நிழற்குடை - அடிக்கல் நாட்டிய MLA](https://mychengai.com/ariyanur-new-bus-shelter-foundation-stone/): மதுராந்தகம் அடுத்த அரியனூர் கிராமத்தில் ரூ.6 லட்சம் செலவில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. அரியனூரில் பேருந்து நிழற்குடை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ., மரகதம் குமரவேலிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தை ஒதுக்கினார். இந்நிலையில், புதிய நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் சுதாகீர்த்தி ஜெயசந்திரன், […] - [காவல் நிலையத்திற்கு பிறந்தநாள் - பொதுமக்கள் ஆச்சரியம்](https://mychengai.com/thiruporur-police-station-birthday-celebration/): திருப்போரூர் காவல் நிலையத்திற்கு போலீசார் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூரில் இ6 காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ஆய்வாளர் அறையாக செயல்படும் பழைய கட்டிடம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 1,200 சதுர அடி பரப்பளவில் கட்டுவதற்கு ஆங்கிலேய போலீஸ் சூப்பிரண்டு ஏ.பி., அகர் ஸ்கொயர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், மேற்கூரை ஓடுகள், தேக்கு மரக் கட்டைகளும் அப்படியே இருக்கின்றன. தற்போது ஆய்வாளர் அறை பகுதி மட்டும் சில மாற்றங்கள் […] - [செங்கல்பட்டில் அரசு வேலை வாய்ப்பு - ரூ.50,000 சம்பளம்](https://mychengai.com/chengalpattu-government-job-recruitment-2026/): செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  (Office Assistant) காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர் பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதிக்குள் (08.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி […] - [நிலத்தை அளவீடு செய்ய வேண்டுமா? - ஆன்லைனில் விண்ணப்பம்](https://mychengai.com/land-survey-online-application/): நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய, இணைய வழியிலேயே விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி வைத்தார். இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நில அளவை செய்ய, எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும், நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, […] - [கேஸ் கசிந்து தீ விபத்து - தூக்கத்திலேயே பலியான பிஞ்சுகள்](https://mychengai.com/chengalpattu-gas-leak-fire-accident-two-children-dead-midnight/): செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில், உறங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பெரிய மணியக்காரர் பகுதியில், சுதாமி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டில் நள்ளிரவில் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி உறங்கிக்கொண்டு இருந்தவர்களில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை மற்றும் தாய் படுகாயத்துடன் […] - [கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - நடைமேடை எண்கள் அறிவிப்பு](https://mychengai.com/kilambakkam-bus-terminus-platform-numbers-announcement/): கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு பேருந்துகள் எங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் பேருந்துகள் புறப்படாது என்றும், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் […] - [சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை - செங்கல்பட்டில் இருந்து அயோத்திக்கு…](https://mychengai.com/banana-fiber-saree-chengalpattu-to-ayodhya-sita-idol/): அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோயிலில் உள்ள சீதாதேவி சிலைக்கு பிரத்தியேகமாக வாழை நார் மூலம் தயாரிக்கப்பட்ட சேலை செங்கல்பட்டில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூரில் இயற்கைப் பொருள்கள் கொண்டு ஆடைகள் நெசவு செய்யப்படுகிறது. கழிவாகக் கருதி ஒதுக்கும் பொருட்களில் இருந்து நாரெடுத்து காய்கறி, பழங்கள் பட்டைகளில் வண்ணங்கள் எடுத்து சேலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அனகாபுத்தூரில் கடந்த 12 வருடங்களாக இயற்கை நார் நெசவுக் குழுமும் வாழை, மூங்கில், […] - [கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை - பயணிகள் மகிழ்ச்சி](https://mychengai.com/kilambakkam-bus-terminus-prepaid-auto-service-launched/): கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் செயல்பாட்டிற்கு வந்த ப்ரீபெய்ட் ஆட்டோ சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு 18 ரூபாய்க்கு பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக சிஎம்டி அலுவலர்கள் மற்றும் […] - [திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச விழா - ஏற்பாடுகள் தீவிரம்](https://mychengai.com/thaipusam-festival-arrangements-thiruporur-kandaswamy-temple/): செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25அஅம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமையில் வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. […] ## Pages - [Home (2)](https://mychengai.com/home-2/) - [Login/Register](https://mychengai.com/tds-login-register/) - [My account](https://mychengai.com/tds-my-account/) - [Checkout](https://mychengai.com/tds-checkout/) - [My account](https://mychengai.com/my-account/) - [Checkout](https://mychengai.com/checkout/) - [Cart](https://mychengai.com/cart/) - [Shop](https://mychengai.com/shop/) - [Home](https://mychengai.com/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)