Advertisement

அண்ணாமலையின் புதிய இயக்கம்: ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் 17 லட்சம் பேர் சேர்க்கை; 25% ஜென்-சி இளைஞர்கள்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தில் இதுவரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 239 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். இதில் 25.2% பேர் ஜென்-சி இளைஞர்கள் ஆவர்.

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தைக் கடந்த ஜூன் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

நேற்று காலை நிலவரப்படி, இந்த புதிய இயக்கத்தில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 239 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த உறுப்பினர் சேர்க்கையில், சுமார் 25.2 சதவீதம் பேர் ‘ஜென்-சி’ (Gen-Z) எனப்படும் புதிய தலைமுறை இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு அரசியலுக்கு மாற்றாகச் சாமானிய மக்களுக்கான தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதே தங்களது இலக்கு என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே தங்களது இயக்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், தற்பொழுது யாருக்கும் எந்தவிதப் பொறுப்புகளோ அல்லது நிரந்தரப் பதவிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்கள் மற்றும் புதிய தலைவர்களை உருவாக்குவதற்காக, அப்துல் கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் மற்றும் அரசியல் நன்னெறி மையம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் உறுப்பினர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement